Friday, June 5, 2015

Infatuation Love Issues in Teen Age Counseling Clinic in Chennai, இளம் வயதினருக்கு வரும் இனக்கவர்ச்சி காதல் பிரச்சினைகளுக்கான சைக்காலஜி ஆலோசனை மையம், சென்னை, வேளச்சேரி,


 saikalagi in chennai, tamil nadu, sikalaji in chennai, saikolagy in tamil nadu, சைக்காலஜிஸ்ட் இன் சென்னை, தமிழ் நாடு,


இளம் வயதினருக்கு வரும் இனக்கவர்ச்சி காதல் பிரச்சினைகளும் அதன் தீர்வும்Infatuation Love Issues in Teen Age

மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிபப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என பெயரிடலாம்.

எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும்.

நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.

வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக்கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப் படுத்த வேண்டும்.

ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டு வதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [Distending or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்து கின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர் கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக் கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும் போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.

எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய் யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தை களிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.

நம்மிடையே மனநல ஆலோசனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு.




For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – இனக்கவர்ச்சி காதல், Infatuation Love – 21st Oct, Sunday - Chennai), You will receive Appointment details through SMS.


.


==--==

For Appointment Feel Free to Contact Us

Name

Email *

Message *

Clinic & Camp Clinics



For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us.

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS

Disclaimer

The information provided herein should not be used during any medical emergency or for the diagnosis or treatment of any medical condition. A Registered Medical Practitioner should be consulted for diagnosis and treatment of any and all medical conditions,

Total Pageviews