வயகரா மாத்திரை - விளைவுகளும் பக்க விளைவுகளும்
பாலியல் தொடர்பில் ஆண்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான நோய் ஆணுறுப்பு விரைப்பு தண்மை குறைபாடு. ஆங்கிலத்தில் இது impotence எனப்படுகிறது.
இது பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளம் வயதில் இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொண்டிருந்தால் அதற்குரிய காரணம்,
Ø
செக்ஸ் மீது அவருக்குரிய அச்சமான பயந்த மனநிலை. Fear about sex,
Ø
அளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் – work pressure, Stress,
Ø
தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள் வாக்குவாதம்.- Misunderstanding with spouse, fighting’s.
Ø
மன அழுத்த நோய் - Depression
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் செய்ய முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்.
இது தவிர கீழ்கண்ட மற்றும் வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம்.
¬
மது – Alcohol
¬
புகைத்தல்- Smoking
¬
நீரழிவுநோய் – Diabetes,
¬
உயர் இரத்த அழுத்தம் – High Blood Pressure
¬
ஈரல்பாதிப்பு – Liver Disorders
¬
சிறுநீரகநோய் – Kidney Diseases
¬
பாரிசவாதநோய் - Paralysis
¬
மனஅழுத்தநோய் – Depression, Anxiety
வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டனாபில்
(SILDANAFIL) என்ற கெமிக்கல் வேதிப்பொருள் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது.
வயாக்ரா ஆனது 25mg,
50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.
வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.
ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.
குறிப்பாக இதய நோயாளிகள் , மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.
இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN
எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.
வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகள் ஏற்படலாம்,
ü
தலைவலி – head ache
ü
வயிற்று நோய் – Abdominal Stomach Diseases,
ü
வாந்தி – Vomiing
ü
வாந்தி வரும் உணர்வு - Nausea,
ü
வயிற்றுப்போக்கு, Loose Motion,
ü
பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை – Color Blindness,
ஓமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில்
பாதுகாப்பான பக்கவிளைவுகளற்ற பல நல்ல மருந்துகள் ஆண்மைக்குறைவு, விரைப்புத்தண்மை
குறைபாடு, குழந்தையின்மை, விந்து முந்துதல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளது. இவற்றை
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை
தொடர்புகொள்ளவும்.
சுய மருத்துவம் தவிருங்கள் – சுகமாக வாழுங்கள்
==--==