பெண்களின் பருவ வயது வளர்ச்சி
பொதுவாக பெண்கள் வயதுக்கு வருவது என்றால் அவர்கள் முதல் முறையாக மாத விலக்கு வருவது என்று கருதுகிறோம். அவ்வாறு ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக மாத விலக்கு வந்துவிட்டாலே, அவள் முழுமையாக “பெரியவளாகி” விட்டால் என்று சொல்வார்கள்,..
பெண்கள் உடல் ரீதியாக சிறுமிப் பருவத்தில் இருந்து, அவளே குழந்தை பெரும் பருவத்தை எய்துவது ஆங்கிலத்தில் ப்யூபர்ட்டி (Puberty) என்கிறார்கள். முதல் முறையாக மாத விடாய் வருவதை, (Menarche) பெண்களுக்கு ஏற்படும் வளர்ச்சியின் ஒரு சிறிய பகுதியாகவே மருத்துவ சமூகம் பார்க்கிறது. இப்போது நாம் பார்க்க இருப்பது, ஒரு பெண், சிறுமிப் பருவத்தில் இருந்து முழுமையாக பெரிய பெண் ஆகும் நிலைகள் பற்றியது:
குறிப்பு: ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரம்பரியம், உணவு முறைகளுக்கு ஏற்ப, இந்த வயதுகள் சற்றே வித்தியாசப்படும். நாம் இங்கே எடுத்துக்கொள்வது சராசரியான வயதுகளைத்தான்.
9 – 10 வயது:
¬ பெண்கள் வேகமாக, உயரமாகவும், எடை கூடவும் ஆரம்பித்து விடுவார்கள்.
¬ இந்த வயதில் அவர்களுக்கு முலை, மார்பு வளர்ச்சியோ, அல்லது அந்தரங்கப் பகுதியில் முடி வளர்ச்சியோ இருக்காது.
10-11 வயது:
¬ இந்த வயதுகளில், பெண்ணுறுப்பின் மீது லேசாக முடி வளரத் தொடங்கும். பூனை முடி மறையத் தொடங்கி, லேசாக கருமுடியாக வளர ஆரம்பிக்கும்.
¬ மார்புகாம்பை சுற்றி உள்ள கருவட்டம் பெரிதாக ஆரம்பிக்கும். மார்பு தசையும் லேசாக ஆரம்பித்து, மார்புகாம்பு மெல்ல வெளியே புடைக்க ஆரம்பித்து விடும். இதனை முலை மொட்டு ( nipple
buds ) என்று அழைப்பார்கள்.
¬ போன வயதுக்காலத்தில் நடக்கும் திடீர் உடல் வளர்ச்சி சற்றே மட்டுப்படும்.
11 – 12 வயது:
¬ கிட்டத்தட்ட 75% பெண்கள் இந்த வயதில் முதல் முறையாக மாத விடாய் வெளியேறி விடும். இதனை ஆங்கிலத்தில்
Menarche என்று சொல்வார்கள். இதனைத் தான் நாம் பெண்கள் “வயதுக்கு வந்து விட்டதாக” கருதுகிறோம். பலர் பெண்ணுக்கு மாத விலக்கு ஆரம்பித்து விட்டாலே, அவள் கர்ப்பம் தரிக்க தயாரானவள் என்று நினைக்கிறார்கள், இது ஒரு தவறான கருத்தாகும். உண்மையில் பல பெண்கள் மாத விலக்கு வந்தாலும், சில வருடங்கள் கழித்தே கர்ப்பம் தரிக்க உடல் ரீதியாக தயாராவார்கள்.
¬ முடி வளர்ச்சி, பெண்குறி மேட்டிலும் அதைச் சுற்றியும் நன்றாக வளரத்தொடங்கும்.
¬ மார்பு காம்புகள் முலையைத் தாண்டியும், முலையை சுற்றிய கருவட்டத்தை தாண்டியும் நன்றாக வளரத் தொடங்கும்.
12 -13 வயது:
¬ பெண்களுக்கு மாத விடாய் முதன் முறையாக வந்தவுடன், அவர்கள் கிட்டத்தட்ட ஒரு அரை அடி உயரம் தான் வளருவார்கள். அதற்கு மேல் அவர்களின் வளர்ச்சி நின்று விடும்.
¬ உடலின் கொழுப்பு அளவு (25 – 26
%), பெரியவர்களுக்கு உள்ள அளவுக்கு நிகராக ஆகி விடும்.
¬ மார்புகள் வளர்ச்சி நன்றாக பெருகும்.
13-15 வயது:
¬ மார்பகங்கள் முழு வளர்ச்சி பெற்று, உடலை மீறித் தெரியும்.
¬ பெண்குறி மேடு முடிகள் பெரியவர்களுக்கு வளரும் விதமாக இருக்கும். பூனை முடிகள் முழுமையாக உதிர்ந்து விடும்.
==--==