ஆண்மைக்குறைவு
ஒரு ஆணால் பெண்ணை உடலுறவு ரீதியாக திருப்தி படுத்த முடியாத நிலை ஆண்மைக்குறைவு எனப்படுகிறது.
இதை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம்,
1- ஆணுறுப்பு விரைப்புத்தன்மை குறைபாடு
2- விந்து முந்துதல்
1-ஆணுறுப்பு விரைப்புத்தன்மை குறைபாடு
பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம், ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு
வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணுறுப்பின் உள்சென்று சில நிமிடங்கள் இயங்கி
சந்தோஷத்தையும் உச்சக்கட்டத்தையும், கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து
பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல விந்தையான செயல்பாடு
ஆணுக்கே உரித்தானது.
ஆனால் பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர்.
வயது வரம்பு இன்றி ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விரைப்பின்மையால்
தான். இது நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு
என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது
அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு
காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மன ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள்
ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய
நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன்
காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விரைப்பு ஏற்படாது
போவது, இதற்கு காரணங்களாக அமைவது
- சர்க்கரை
வியாதி எனும் நீரிழிவு,
- வயது முதிர்வு,
- சிறுவயதில்
அதிக கைப்பழக்கம் மற்றும்
- தண்டுவடத்தில்
ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள்
மன ரீதியான கோளாறுகள் தான் ஆண்களுக்கு அதிகமாக
ஏற்படுகின்றது. அதாவது அவர்கள்
- மனதளவில்
நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது.
- அதே ஆண்களால்
தனியாக இருக்கும் போதும் இரவில் தூங்கும் போதும் விரைப்பு அடைய முடியும்.
- ஆனால் உடலுறவு என்று
வந்தால் விரைப்படைய முடியாது. இது மன ரீதியான பிரச்சனை.
இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு
என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும்
சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு உண்டாகும் என்றும்
ஒரு எண்ணம் பரவலாக உள்ளது ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண்
ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் வரும்.
அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின்
எண்ணிக்கை மிகவும் குறைவு.
வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு (நீரிழிவு), இரத்தஅழுத்தம்
அதிகரித்தல், மது, மன சோர்வு, மற்றும்
டென்ஷன் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய்
மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட
வாய்ப்புள்ளது.
பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை
போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல
ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது
மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், ஆகியோரை ஆண்மைக்குறைவு அதிகம் தாக்குவதில்லை.
2- விந்து முந்துதல்
ஒரு ஆண் தனது பெண் துணை உச்சத்தை அடைவதற்கு முன்பே விந்தை வெளியேற்றுவது விந்துமுந்துதல் எனப்படும்.
அநேகமாக மூண்றில் இரண்டு பங்கு ஆண்களின்
உறவுகளில் விந்துமுந்துதல் நிகழ்கிறது.
புணர்ச்சி ஆரம்பித்து விந்து வெளியேறுவதற்கான
சராசரி நேரம் வெறும் 3 லிருந்து 5
நிமிடம் மட்டுமே. எனவே அரைமணி ஒருமணி நேரம்
புணர்ச்சி என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்திருந்தால் அது நிகழாது.
ஒருவர் 10 நிமிடத்தில்
உச்சநிலை அடைகிறார். அவரின் பெண் துணை 20 நிமிடத்தில்
உச்சநிலை அடைகிறார் என்றும் கொண்டால் இது விந்து முந்துதல் ஆகும்.
இதுவே 10 நிமிடத்தில் ஆண் உச்ச
நிலை அடைவதாகவும் ஆனால் அவரின் பெண் துணை 8 நிமிடங்களுக்குள்ளாகவே
உச்சநிலை அடைந்தால் இது விந்து
முந்துதல் அல்ல.
விந்துமுந்துதலுக்கான காரணங்கள்.
- மன அழுத்தம்,
- பெண் துணையுடன் மனம் விட்டு பேசாமை,
- "விந்து
முந்துமோ "என்ற பயம்..
- மற்றவர்கள்
கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும்
உறவு கொண்டவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேரலாம்.
- சிலருக்கு அதீத பாலியல் வேட்கை / கிளர்ச்சி
காரணமாகும்.
- நேரத்தை நீட்டிக்க சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள், ஆனால் இது விந்து முந்துதலை அதிகப்படுத்தும்.
விரைப்புத்தன்மை குறைபாடு & விந்து
முந்துதல் சிகிச்சை
- புணர்ச்சிக்கு
முன்னரான பாலியல் செயற்பாடுகளில் அதிக நேரத்தை செலவிடல்
- உணர்வுகளை
கட்டுப்படுத்த பயிற்சி பெறல்.
தகுதிவாய்ந்த மருத்துவரிடம் பெறப்படும் சரியான மருத்துவ சிகிச்சை நன்கு பலனலிக்கும்.
நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, விரைப்புத்தன்மை குறைபாடு & விந்து
முந்துதல் சிகிச்சை சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற
நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 32, – 99******00 –
விரைப்பு தண்மை குறைபாடு, நரம்பு தளர்ச்சி, குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==