Poly – பாலி என்பது பல என்பதை குறிக்கும். Cystic – சிஸ்ட்டிக் எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , Ovarian - ஓவேரியன் எனப்படுவது பெண்களின் சூலகம். Disease / Syndrome -டிஸீஸ் / சிண்ட்ரோம் - நோய் / நோய்க்குறிகள்
ஓவரிதான் அண்ட அனு முட்டைகளை உருவாக்குகிறது. அந்த முட்டைகள் விந்தனுக்களுடன் சேர்ந்து குழந்தைகள் உருவாகின்றன. ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாகி நோய்குறிகளை உண்டாக்குவதே சூலக நீர்க்கட்டி நோய் / நோய்க்குறிகள் - Poly Cystic Ovarian Syndrome எனப்படுகிறது. இந்த நோயானது இளம்வயது மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கு வரும் பொதுவான ஒரு நோயாகும். நிறைய பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் எல்லா பெண்களுக்கும் நோய் அறிகுறி தெரிவதில்லை. இந்த நீர் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அதிகமாக ஹார்மோன்களை சுரப்பதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சூலக நீர்க்கட்டி நோயின் அறிகுறிகள்.
- ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் நாட்கள் அதிகமாக தள்ளிப்போதல்,
- மாதவிடாய் வந்தாலும் குறைவான அல்லது அதிகப்படியான இரத்தப்போக்கு,
- மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.(Irregular menses, excessive or less blood flow)
- அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு முடி வளர்தல், அதாவது முகத்தில், தாடி, மீசை போன்று முடிவளர்தல், மார்பு, தொடை போன்ற இடங்களில் முடி வளர்தல்.(Hairs on face, chin, lips, chest, breast and thighs)
- தலையில் முடி கொட்டுதல். பொடுகு,(Hair falling and Dandruff)
- உடற் பருமன் அதிகரித்தல்.தொடை மற்றும் வயிறு பகுதிகள் பெருத்து காணப்படும்,(Obesity and weight gain in abdomen and thighs)
- அளவுக்கதிகமான பரு (முகப் பரு). முகத்தில் எண்ணை வடிதல். (Pimples / Acne, Oily face)
- அடிக்கடி கர்ப்பம் தரித்து பின் கலைதல்.(Habitual Abortion)
- மன அழுத்தம் மன உளைச்சல்,(Stress, Depression)
- அதிக இரத்த அழுத்தம், (High Blood Pressure)
- இன்சுலின் குறைபாடுகள்( Insulin Insufficiency – Diabetes )
இந்த அறிகுறிகள், எல்லா பாதிக்கப்பட்ட பெண்களிடமும் இருக்கும் என்றில்லை. இந்த நோய் இருக்கும் போதே பல பிள்ளைகளைப் பெற்று வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டராக இருக்கிறார். மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, பெண்களுக்கு கீழே உள்ள பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மருத்துவரை உடனடியாக அனுகி மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்....
- 18 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால் (வயதுக்கு வராமல் இருந்தால்).
- முகம் மார்பு, போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால். (பெண்களுக்கு தாடி, மீசை வளர்தல்)
- ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால். (மாதவிடாய் நாட்கள் அளவுக்கு அதிகமாக தள்ளிப்போதல்)
- உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.
- அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.
- உங்கள் கழுத்து மற்றும் கை இடுக்கு, பகுதிகளிலே கறுப்புப் நிறதேமல் போன்று காணப்பட்டால்.
- அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டால்.
மேலும் விவரங்களுக்கும் சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
மருத்துவரை நேரில் சந்திக்க சென்னை: (முன்பதிவு அவசியம்) புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00am to 1.30pm மாலை 5.00pm to 8.30 pm வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் 82 & 83 (முதல் மாடி) வேளச்சேரி இரயில் நிலையம் சாலை, அன்னை இந்திரா நகர் ( வேளச்சேரி இரயில் நிலையம் மிக அருகில்) வேளச்சேரி, சென்னை -42 முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
பண்ருட்டி: (முன்பதிவு அவசியம்) திங்கள் & செவ்வாய் காலை 10.00am to 1.00pm மாலை 5.00pm to 8.30pm விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் 126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்) (லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்) பண்ருட்டி – 607106 கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி - பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்) காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168 மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
குறிப்பு
- ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
- ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
- இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
- எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
- உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள் 1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் 2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார், 3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4- தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். 5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும். 6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.