கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது ஆண் நான், எனது மனைவியின் வயது 31. திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் ஒரு பெண்ணும், 6 வயதில் ஒரு ஆணும் இருக்கிறார்கள். தற்போது பிரச்சினை என்னவென்றால் எனது மனைவிக்கு வெளியே ஆண்கள் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. என்மீதும் ஈடுபாடு இல்லை, உடலுறவு கொண்டே பலமாதங்கள் ஆகிறது. தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
மருத்துவர் பதில்: திருவாளர் அவர்களுக்கு, முதலில் நீங்கள் உங்களின் மனைவியை முழுதாக நேசியுங்கள். சந்தேகப்படாதீர்கள்.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண்களிடையே இன்று சாதாரணமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
இருப்பினும் ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன என்னவென்று பார்க்கலாம். இந்த காரணங்களில் ஏதேனும் ஒன்று இருப்பின் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் உடன் மனநல ஆலோசகர்/ மருத்துவரை சந்தியுங்கள்.
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?
தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் முழு திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முக்கிய காரணம்.
ü தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தி அடையாத அந்தப் பெண் தனது உணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ள இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.
ü அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் அமைப்பையும், அழகையும், இயலாமையையும் தன் கணவன் அநாகரிக மாக விமர்சித்தாலோ, குறை கூறினாலோ அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடலாம்.
ü திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும்.
ü திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
ü திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவும், கற்பனையும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
ü வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.
ü வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.
ü தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட வழி வகுத்து விடுவதும் உண்டு.
ü தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத போதும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் நினைக்கும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் மாட்டிக்கொள்கின்றனர் .
ü ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலும் அதிக இன்பம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ü செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு. எனவே இவர்கள் தயங்காமல் உளவியல் ஆலோசனை பெறுவது நல்லது
உளவியல் / மனநல ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.