சுய இன்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. மருத்துவரீதியாக
எந்த கெடுதலும் கிடையாது.
இதில் ஒரு அறிவுரை என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும்
இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறக்காமல் இருக்க பெண்கள் மட்டுமே காரணமா?
v குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி
கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற
உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. விரைப்பு தன்மையில்லாத ஆண்கள்
சரியான மருந்துகள் எடுத்துக்கொள்வதின் மூலம் சரிசெய்து கொள்ளலாம். ஆண்களின்
விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம்
இதனையும் மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?
v பொதுவாக ஆண்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி
இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு
உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.
v குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது
என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை
மேற்கொள்வது அவசியம்.
v இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி
உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.
பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:
v இப்பரிசோதனைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய
உறவு அல்லது கைபழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனை கூடத்திற்கு சென்று
விந்து எடுப்பது சரியான முறையாகும்.
v குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே
கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
பரிசோதிக்கப்படுபவை
·
ஆய்வகத்தில்
எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
·
விந்தணுக்களின்
எண்ணிக்கை.
·
விந்தணுக்களின்
ஊர்ந்து செல்லும் திறன்.
·
இயல்பான
உயிரணுக்கள்.
·
பாக்டீரியா
போன்றவை.
·
ரசாயனங்கள்
மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு
மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும்
குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே
கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40
சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது
குறைபாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான
அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவையிருந்தால், நோய்த்
தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை
குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.
நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய
பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என
அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த
முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது
இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.
ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள்.
v உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை
இல்லை என்று பயப்படுகிறார்கள். பெரும்பான்மையான ஆண்கள் காம படங்களைப்பார்த்தும்
காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
v ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை. உடலுறுவு கொள்ள
மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே
மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை
பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு
கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
v விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மை குறைபாடல்ல, விஞ்ஞான
முறைப்படி உச்சகட்ட உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம்
உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
v தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கை. விந்து உற்பத்தி
அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும்.
இது ஆண்மையின் குறைபாடு அல்ல.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க consult.ur.dr@gmail.com
Whom to contact for Over Masturbation
Counseling & Treatment
Dr.Senthil Kumar Treats many cases of Over Masturbation, In
his medical professional experience with successful results. Many patients get
relief after taking treatment from Dr.Senthil Kumar. Dr.Senthil Kumar
visits Chennai at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get
appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For more details & Consultation Feel free to contact
us.
Vivekanantha
Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail
Us
For appointment: SMS your Name -Age – Mobile Number -
Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 -
99xxxxxxx0 – Over Masturbation – 21st Oct, Sunday - Chennai ), You will receive
Appointment details through SMS
==--==